அமெரிக்காவில் கடற்கரையில் காலை நடைபயிற்சிக்கு சென்ற இந்திய மாணவி காணாமல் போயுள்ளார். பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவி சுதிக்ஷா கோணங்கி (20) மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். சுதிக்ஷா கடைசியாக மார்ச் 6ஆம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு ரியு ரிபப்ளிகா ரிசார்ட் கடற்கரைக்கு சென்றுள்ளார். கடலில் குளித்தபோது அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என உள்ளூர் நிர்வாகம் கூறுகிறது. அதே நேரத்தில், மாணவி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலும் விசாரணை நடந்து வருகிறது.