அதானி மீதான லஞ்ச வழக்கு குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் பூ கொடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நாடாளுமன்றத்திற்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பூ, தேசியக் கொடியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வழங்கினார். மேலும், அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். அவர்களின் வித்தியாசமான போராட்டம் அனைவரது கவனத்தை ஈர்த்தது.