I.N.D.I.A கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நிறைவு

78பார்த்தது
I.N.D.I.A கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நிறைவு
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சற்றுமுன் நிறைவு பெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் I.N.D.I.A. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான பதிலை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக பேசப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி