மலையேற்றத்தில் ஈடுபட்ட 9 பேர் சடலமாக மீட்பு... 13 பேர் மாயம்!

77பார்த்தது
மலையேற்றத்தில் ஈடுபட்ட 9 பேர் சடலமாக மீட்பு... 13 பேர் மாயம்!
உத்திரகாண்ட் மாநிலம் உத்திரகாசியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,000 அடி உயரத்திலுள்ள சாஸ்திரா தல் நதிக்கு மலையேற்றத்தில் ஈடுபட்ட 9 மலையேற்ற வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று(ஜூன் 4) சாஸ்திரா தல் நதிக்கு சென்று கொண்டிருந்த 22 மலையேற்ற வீரர்கள் மோசமான வானிலை காரணமாக தொலைந்தனர். இந்நிலையில், காட்டு இலாகா அதிகாரிகளுடன் நேற்று முதல் மாநில மீட்புப்படையினர் நடத்திவந்த தேடுதலில் 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி