டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. ஆலோசனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல், பிரியங்கா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 234 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சியாக செயல்படுவதா அல்லது சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் ஆதரவு கோருவதா என ஆலோசனை நடத்த உள்ளனர்.