இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புற்றுநோய் விகிதம் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கு காற்று மாசுபாடு ஒரு காரணம் என்றால், தற்போதைய வாழ்க்கை முறையும் மற்றொரு காரணம். அதாவது அதிகப்படியான நொறுக்குத் தீனி, மது, புகைபிடித்தல், தூக்கமின்மை, அதிக மன அழுத்தம் போன்றவையும் புற்றுநோயை உண்டாக்கும். 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது.