சூர்யாவுக்கும் எனக்கும் பிரச்னையா? அமீர் விளக்கம்

30993பார்த்தது
சூர்யாவுக்கும் எனக்கும் பிரச்னையா? அமீர் விளக்கம்
'வாடிவாசல்' படத்தில் சூர்யாவுடன் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று இயக்குநர் அமீர் விளக்கமளித்துள்ளார். பருத்திவீரன் பட பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமீர் தரப்பும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். பருத்திவீரன் பட சர்ச்சையால், வாடிவாசலில் அமீர் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் அளித்த அமீர், உதவி இயக்குநராக இருக்கும்போது ஆத்மார்த்தமாக பழகிய நண்பர் சூர்யா. எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை. இந்த பிரச்னை எல்லாம் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்காது என்றார்.

தொடர்புடைய செய்தி