தெலங்கானா: ராஜா நர்சு என்ற நபரின் பைக்கில் இருந்த பெட்ரோலை யாரோ திருடி வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டுபிடிக்க, பைக்கை யாராவது தொட்டால் அவர்கள் மீது மின்சாரம் பாய்வது போல ராஜா ஏற்பாடுகளை செய்திருந்தார். இதை அறியாத அவரின் மனைவி ராதிகா (28) பைக்கின் மீது கை வைத்த நிலையில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.