உத்தர பிரதேசத்தின் வாரணாசியை சேர்ந்த ராஜேந்திரா (45) என்பவர் 1997-ல் நடந்த கொலை சம்பவத்தில் கைதாகி அண்மையில் ஜாமீனில் வெளியில் வந்தார். கடந்த திங்கள் (நவ. 04) மாலை தனது மனைவி நீத்து (43), மற்றும் மூன்று பிள்ளைகளை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ராஜேந்திரா தானும் தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ராஜேந்திராவுக்கும், அவர் மனைவிக்கும் இடையே பிரச்னை இருந்தது தெரியவந்துள்ளது.