இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் இருப்பது பிளம்ஸ் பழம். இதில் வைட்டமின் ஏ, சி, பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன. மேலும் இதில் பொட்டாசியம், குளோரைடு, இரும்பு, தாது உப்புக்கள் இருப்பதால் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பை கட்டுப்பாட்டில் வைக்கும். அல்சைமர் பாதிப்புகளையும் குறைக்கும். இதன் சதையை நிழலில் உலர்த்தி, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஜீரண பிரச்சனைகளும் நீங்கும்.