வனவிலங்குகளின் பல செயல்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்த தவறுவதில்லை. அதிலும் அவை சாப்பிடும் காட்சிகளை பார்க்கும் போது நம்பமுடியாத வகையில் ஆச்சரியமாக இருக்கும். அப்படி அமெரிக்காவின் சின்சினாட்டி உயிரியல் பூங்கா & தாவரவியல் பூங்காவில் வசிக்கும் நீர்யானை தனது வாயை மிக அகலமாக திறக்க அதற்குள் பெரிய பூசணிக்காய் வைக்கப்படுகிறது. அதை ஒரு நொடியில் கடித்து நீர்யானை விழுங்குகிறது. இந்த காட்சி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.