தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்கிறது. திருவாரூரில் தொடர் மழை காரணமாக இன்று (நவ. 08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். சிவகங்கையில் மழை தொடர்வதால் விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் முடிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.