இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளைத் தொடர்ந்து படைக்கவும் 2024-ஐ வரவேற்கிறேன் என முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தனது அரசு 2023 ஆம் ஆண்டில் செய்த சாதனைகளை திரும்பிப் பார்க்கும் விதமாக காணொளி காட்சி ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில், கலைஞர் நூற்றாண்டு நூலகம், பெண்களுக்கு மாதம் ரூ.1000, நான் முதல்வன் திட்டம் போன்ற சாதனை பட்டியல்கள் இடம்பெற்றுள்ளது.