மதுரை கூடல் நகர் சந்திப்பை இரண்டாவது ரயில் முனையமாக்க வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், சரக்கு வண்டிகளுக்கு செக்காணூரனி வழியாக பைபாஸ் அமைக்க வேண்டும் என்றும், மதுரை - மேலூர் - காரைக்குடிக்கு புதிய வழித்தடம் அமைக்க வேண்டுமெனவும் மதுரைக்கான இரயில்வே திட்டங்களை இரயில்வே அமைச்சரின் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் முன்வைத்து அவர் பேசியுள்ளார்.