பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களுக்கு ரயில்வே துறை நற்செய்தியை வழங்கியுள்ளது. குழந்தைகளுக்கான பெர்த்கள் சோதனை முறையில் அமைக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்தார். லக்னோ அஞ்சல் சேவையில் சோதனை முறையில் இரண்டு பெர்த்கள் நிறுவப்பட்டுள்ளன என்றார். ஆனால் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான இடவசதி குறைவு, இருக்கைகளுக்கு இடையே உள்ள தூரம் குறைதல் போன்ற பிரச்னைகள் கண்டறியப்பட்டுள்ளன என்றார்.