2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பாலின சமத்துவத்தினை தொடர்ந்து சரியாக 50 சதவீதம் ஆண் மற்றும் பெண் பங்கேற்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டை ஒப்பிடச் செய்யும்போது, கலப்பு பாலின பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளின் எண்ணிக்கை 18 என்ற அளவிலிருந்து 22 ஆக அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் 32 விளையாட்டுகளில் 28 போட்டிகளில் முழு பாலின சமத்துவம் பேணப்பட்டுள்ளது.