அமலுக்கு வந்த கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

89594பார்த்தது
அமலுக்கு வந்த கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் விலை நள்ளிரவு முதல் ரூ.100 குறைந்து ரூ.818.50க்கு விற்பனையாக உள்ளது. மகளிர் தினத்தை ஒட்டி கியாஸ் சிலிண்டரின் விலையை ரூ.100 குறைத்து பிரதமர் மோடி அறிவித்திருந்தார். நேற்று அவர் வெளியிட்டிருந்த X தள பதிவில், கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு லட்சக்கணக்கான இல்லத்தரசிகளின் பொருளாதார சுமையை வெகுவாக குறைக்கும். பெண்களுக்கு எரிவாயு சிலிண்டர் விலை குறைவாக கிடைப்பதன் மூலம் குடும்பங்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு வழிவகுக்கும் என பதிவிட்டார்.

தொடர்புடைய செய்தி