தனியார் பள்ளிகளில் இலவச சீட் - விண்ணப்பம் தொடக்கம்

75பார்த்தது
தனியார் பள்ளிகளில் இலவச சீட்  - விண்ணப்பம் தொடக்கம்
தமிழகத்தில் ஏழை குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் ஒதுக்கப்படுகிறது . தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் உள்ள 1.10 லட்சம் இடங்களில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை இலவசமாக படிக்கலாம். இந்த இடங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை கல்விக்கட்டணம் செலுத்தும். இந்நிலையில், வரும் (2024-25) கல்வி ஆண்டில் இலவச சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு இன்று (ஏப்ரல் 22) தொடங்கியுள்ளது. விண்ணப்ப பதிவு வரும் மே 20ஆம் தேதி வரை நடக்க உள்ளது. விண்ணப்பதாரர்கள் rte.tnschools.gov.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி