திமுக முன்னாள் எம்எல்ஏ கோதண்டம் (99) காலமானார். ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் 1989 மற்றும் 1996 தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற கோதண்டம் வயது மூப்பு காரணமாக இன்று (நவ.12) காலமானார். பல்லாவரத்தை அடுத்த குன்றத்தூரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கோதண்டத்தின் இறப்பிற்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.