தென்காசி: முசாபுதீன் என்ற இளைஞருக்கு திருமணமான 30 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் தனிமையில் உல்லாசமாக இருந்த போது அதை அப்பெண்ணுக்கு தெரியாமல் முசாபுதீன் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த பெண்ணின் குடும்பத்தார் கண்டிக்கவே முசாபுதீனுடன் பேசுவதை அந்த பெண் நிறுத்திவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த முசாபுதீன், அந்த பெண்ணுடன் தனிமையில் இருக்கும் வீடியோவை, அந்த பெண்ணின் உறவினருக்கு அனுப்பினார். இதையடுத்து, முசாபுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.