மண்வீட்டிற்குள் ஃபர்ஸ்ட் ப்ளோர்.. வைரலாகும் வீடியோ

72பார்த்தது
குமக்கட் லாலி என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பதிவிட்ட வீடியோ 5.3மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் கஜுராஹோ கிராமத்திற்கு சென்ற குமக்கட் அங்கு இரண்டு மாடிகளைக் கொண்ட பாரம்பரியமான மண் வீட்டை கண்டு ஆச்சரியப்பட்டார். வெளியே 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்த போதிலும், மண் வீட்டின் உட்புறம் 20 முதல் 25 டிகிரி வரை இருந்துள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில், பல பயனர்கள், கிராமப்புற கட்டிடக்கலையின் புத்தி கூர்மை மற்றும் எளிமைக்கு தங்கள் பாராட்டை வெளிப்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி