முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பதிவில், 2021-22 ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ரூ 63,246 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கும் என அறிவித்தார். நேற்று முதலமைச்சர் இதுவரை மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு 1 ரூபாய் கூடத் தரவில்லை என்று அறிவித்தார். முதல்வரின் கூற்றுக்கு மத்திய அரசு குறிப்பாக நிதியமைச்சர் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.