அதிமுகவிற்கு சாதகமாக அமையும் - வைகைச்செல்வன்

52பார்த்தது
அதிமுகவிற்கு சாதகமாக அமையும் - வைகைச்செல்வன்
திமுக எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளுக்கு எந்த பணிகளும் செய்யாததால், மக்கள் எதிர்ப்பு நிலையில் உள்ளதால், அவர்கள் வாக்கு அனைத்தும் அதிமுகவிற்கு திரும்பும் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், '2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 39 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். அவர்கள் தங்களது தொகுதிகளில் சிறு துரும்பை கூட மக்களுக்காக கிள்ளி போடவில்லை. இதனால், மக்கள் அவர்களுக்கு எதிரான நிலையில் உள்ளனர். அந்த வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்கு தான் வரும். இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுகதான் வெற்றி பெறும்' என்றார்.

தொடர்புடைய செய்தி