பால் பண்ணை பெண் ஊழியர் உயிரிழப்பு: அமைச்சர் விளக்கம்

79பார்த்தது
பால் பண்ணை பெண் ஊழியர் உயிரிழப்பு: அமைச்சர் விளக்கம்
திருவள்ளூரில் ஆவின் பால் பண்ணையில் வேலை செய்த பெண் ஊழியர் உயிரிழப்பு குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். "25 ஆண்டுகளாக இயங்கிவந்த இயந்திரத்தில் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. கன்வேயர் பெல்டில் பெண் ஊழியரின் துப்பட்டா சிக்கியதே காரணம். பொதுவாக துப்பட்டா அணிய அனுமதிப்பது இல்லை. இனி கோட் போன்ற உடையை அணிவது தொடர்பாக ஆலோசனை நடக்கிறது. உயிரிழந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன்" என தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி