நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்.

1107பார்த்தது
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்.
சமீபத்தில் பெய்த பலத்த மழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
இதில் உடைமைகளை இழந்த மக்களுக்கு உதவும் வகையில் சென்னிமலையில் இருந்து புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக சென்னிமலை, காங்கயம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அதன் அமைப்பாளர்கள் மூலம் அரிசி, பருப்பு, போர்வைகள், துணிகள், நாப்கின்கள், பிஸ்கட்டுகள் மற்றும் நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பாளர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஊர், ஊராக சென்றும், தனி நபர்களை சந்தித்தும் பொருளாகவும், நிதியாகவும் வழங்குவதற்காக சென்னிமலையிலிருந்து புறப்பட்டு சென்றனர். தற்போது அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி