சென்னிமலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி.

556பார்த்தது
சென்னிமலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி.
சென்னிமலை அருகே அம்மாபாளையம் செங்கோட கவுண்டர் வீதியை சேர்ந்தவர் விஜயன் (63). நெசவு தொழிலாளி.
இவர் நேற்று இரவு கடைக்கு போவதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்போது சென்னிமலை - அறச்சலூர் ரோட்டில் விஜயன் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று விஜயன் மீது மோதி உள்ளது.
இதில் பலத்த காயமடைந்த விஜயன் மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்தவர்கள் உடனடியாக விஜயனின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் விஜயனின் குடும்பத்தினர் விரைந்து சென்று அங்கிருந்தவர்களின் உதவியுடன் விஜயனை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே விஜயன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து விஜயனின் மகன் வெள்ளியங்கிரி (37) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி