கார் மோதியதில் பைக்கில் சென்ற விவசாயி பலி

5170பார்த்தது
கார் மோதியதில் பைக்கில் சென்ற விவசாயி பலி
பெருந்துறையை அடுத்துள்ள டோல்கேட் பகுதியில் கார் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெருந்துறை, குன்னத்தூர் ரோடு, கொங்கு நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (55). விவசாயியான இவர், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தனது பைக்கில் விஜயமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக இவரது பைக்கின் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட கோவிந்தசாமி, தலை மற்றும் உடனே பலத்த அடிபட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவ தொடர்பாக, பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி