வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது.

84பார்த்தது
வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது.
பெருந்துறை பகுதியில் வட மாநில தொழிலாளரிடம் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பீகார் மாநிலம், மோத்தியாரி மாவட்டம், மியான் கட்டகினவா பகு தியை சேர்ந்தவர் அமருதீன். இவருடைய மகன் அஸ்கார் மியான் (29). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த கந்தாம்பாளையத்தில் தனது குடும்பத்துடன் தங்கி இருந்து கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று வேலைக்கு செல்வதற்காக பவானி ரோடு, கந்தாம்பாளையம் பிரிவு பஸ் நிறுத்தத்தில் உட்கார்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேர் அஸ்கார் மியானை மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ. 1000-ஐ பறித்துவிட்டு தப்பி செல்ல முயன்றனர். உடனே அங்கிருந்தவர்கள் தப்ப முயன்ற 3 பேரையும் பிடித்து பெருந்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் ஈரோடு அகத்தியர் வீதியை சேர்ந்த துரைசாமி மகன் பாலாஜி (19), ஈரோடு வளையக் கார வீதியை சேர்ந்த அகமது பாஷா மகன் முகமது யூகப் (19), அதே வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகன் விக்னேஸ்வரன் (19), ஆகியோர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you