நான் முதல்வன் திட்டத்தில் ஊக்கத்தொகை: யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு

54பார்த்தது
நான் முதல்வன் திட்டத்தில் ஊக்கத்தொகை: யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு
நான் முதல்வன் திட்டத்தில் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு படிப்பவர்களுக்கு இலவச பயிற்சியுடன், அரசின் ஊக்கத்தொகை ரூ. 7,500 பெறுவதற்கான மதிப்பீட்டு தேர்வு நடைபெற்றது ஈரோட்டில் 2 மையங்களில் 658 பேர் எழுதினர்.

தமிழகத்தில் நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவானது கடந்த ஆண்டு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினால் துவங்கப்பட்டது. நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவானது தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்துடன் இணைந்து யுபிஎஸ்சி தேர்விற்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பயிற்சியை வழங்கி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்விற்கு தயாராகி வருபவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு நடத்தி, அதில், 1000 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து மாதம் ரூ. 7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில், நடப்பாண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வர்கள் ஊக்கத்தொகை மற்றும் இலவச பயிற்சி பெற நான் முதல்வன் மதிப்பீட்டு தோ்வானது மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்று வருகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஈரோடு கலைமகள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வில் 658 பேர் பங்கேற்று தேர்வினை எழுதினர்.

தொடர்புடைய செய்தி