தமிழகத்தில் ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரிக்கரையில் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், குளூர் ஊராட்சி வேலாங்காட்டுவலசு கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் நேற்று (செப். 14) பனை விதைகள் நடும் பணியை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ், மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி. சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.