தமிழ் நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, மது, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
போதை பொருள்களை பயன்படுத்துவதால் மனித மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, சோர்வு, மலட்டுத்தன்மை, ஆண்மை குறைவு, கண் பார்வை பாதிப்பு, வலிப்பு நோய், மாரடைப்பு மற்றும் மன நல பாதிப்புகள் ஏற்பட்டு உயிர்ச் சேதம் ஏற்படும்.
எனவே, மது, கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமை குறித்து இந்த வாகனத்தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்த விழிப்புணர்வு வாகன தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.