ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து குன்னத்தூர் சாலையில் உள்ள ஃபேன்சி ஸ்டோரில் சட்டவிரோதமாக கஞ்சா கலந்த சாக்லேட்கள் விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது கஞ்சா கலந்த 17 சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கடை உரிமையாளரான ராம் மற்றும் அவரது மகன் ஷங்கர் ஆகியோரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.