ஈரோடு மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் விடுமுறை எடுக்க கட்டப்பாடு விதிக் கப்பட்டுள்ளது.
மேட்டூரில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை எந்த நேரத்திலும் முழு கொள்ளளவையும் எட்ட கூடும் என்பதால் மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட் டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தீயணைப்பு துறை வீரர்கள் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். காவிரி கரையோரம் உள்ள அந்தியூர், பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்பு பணி மேற்கொள்ளும் வகையில் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் காவிரியில் வெள்ள அபாய அச்சம் நீங்கும் வரை, அத் தியாவசியத்தை தவிர வேறெந்த நோக்கத்துக் காகவும் விடுமுறை எடுக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.