ஈரோடு வித்தியாசமான தொகுதி - பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு

4447பார்த்தது
ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸைச் சேர்ந்த விஜயகுமாரை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அண்ணன் விஜயகுமார் வெற்றி பெற்று அரசியலில் பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும். நீங்களும் அதை மாற்றத்தை விரும்புகிறீர்கள் என்பது தெரிய வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் 400 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். எந்த அளவிற்கு வலிமையான பிரதமர் வந்து அமர்கிறாரோ நாட்டில் அந்த அளவிற்கு வளமான தமிழகத்தை தமிழகத்தை உருவாக்க முடியும்.

ஈரோடு பாராளுமன்ற தொகுதி பொறுத்தவரை ஒரு வித்தியாசமான பாராளுமன்ற தொகுதி. விவசாய பொதுமக்கள் அதிகம் உள்ள தொகுதி. தொழில் துறை வளர்ச்சியும் அந்த அளவிற்கு உள்ள தொகுதி.
ஆறு சட்டமன்ற தொகுதிகள் கூட அற்புதமான மக்கள் வாழக்கூடிய குமாரபாளையம், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கயம் எல்லா பகுதிகளும் கூட அடிமட்ட மக்கள் இருக்கக்கூடிய நிலை உள்ளது.

சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகள் ஆகியும் அடிமட்ட பிரச்சனைகள் இருக்கக்கூடியது கண்கூடாக பார்க்க முடிகிறது. நான் உங்களிடம் வைக்கக்கூடிய ஒரே ஒரு வாதம் மட்டும் தான். ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் மூன்று அமைச்சர்கள் உள்ளார்கள். தமிழகத்தில் எந்தத் தொகுதியிலும் இதுபோன்ற மூன்று அமைச்சர்கள் எந்த பாராளுமன்ற தொகுதியிலும் இல்லை என்றார்.

டேக்ஸ் :