
கோபி அருகே லாட்டரி விற்ற நபர் கைது
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் பகுதியில் வெளிமாநில லாட்டரி விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சத்துக் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது டி.ஜி.புதூர் காமராஜர் வீதியைச் சேர்ந்த குமார் (51) என்பவர், தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி எண்களை வெள்ளைத்தாளில் எழுதி மோசடியாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடமிருந்த போலியான லாட்டரி சீட்டுக்களையும், ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.