தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோவையின் குற்றாலம் என அழைக்கப்படும் குரங்கு அருவியில் நீர்வரத்து ஆர்பரித்துச் செல்கிறது. பாதுகாப்பு கருதி அருவியில் நீராட, அருவிக்கு அருகே செல்ல வனத்துறை சார்பில் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.