தாளவாடி: வனத்துறையினரை விரட்டிய ஒற்றை காட்டு யானை

55பார்த்தது
தாளவாடி: வனத்துறையினரை விரட்டிய ஒற்றை காட்டு யானை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான், போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இந்நிலையில் நேற்று(செப்.19) மதியம் தாளவாடியில் இருந்து ஆசனூர் செல்லும் சாலை கும்டாபுரம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சாலையில் உலா வந்தது. பின்னர் சாலையில் சிதறிக்கிடந்த கரும்புகளை சுவைத்தது. சிறிது நேரம் அங்குமிங்கும் உலா வந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி வாகன ஓட்டிகள் தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் சாலையில் உலா வந்த ஒற்றை யானையை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் அந்த ஒற்றைக் காட்டு யானை வனப்பகுதிகள் செல்லாமல் வன ஊழியர்களை விரட்டியது. இதில் அதிர்ஷ்டவசமாக வன ஊழியர்கள் உயிர்தப்பினர். கோபமடைந்த ஒற்றைக் காட்டு யானை துதிக்கையால் சாலையில் இருந்த மண்ணை தன் மீது வீசி ஆத்திரத்தை வெளிப்படுத்தியது.

சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக சாலையில் உலா வந்த யானை பின்னர் தானாக வனப்பகுதிகுள் சென்றது. கடந்த சில நாட்களாக இந்த ஒற்றைக்காட்டு யானை சாலையில் உலா வருவதும் வாகனங்களை துரத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி