குருமந்தூர் பூங்குழலி அம்மன் கோயில் குண்டம் திருவிழா

4429பார்த்தது
நம்பியூர் அடுத்துள்ள குருமந்தூர் பூங்குழலி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நம்பியூர் அடுத்துள்ள குருமந்தூர் பகுதியில் பழமை வாய்ந்த பூங்குழலி அம்மன், மாரியம்மன் மாகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பூங்குழலி அம்மன் குண்டம் திருவிழா கடந்த மார்கழி 5 ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கப்பட்டது.

மார்கழி 15 ஆம் தேதி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும் 16ம் தேதி புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக இதற்காக இரவு சுமார் 10 டன் விறகுகள் தீ மூட்டப்பட்டு குண்டம் தயாரிக்கப்பட்டது.

பின்னர் நந்தா தீபம் ஏற்றப்பட்டு, தலைமை பூசாரி கோபால் மற்றும் துணை பூசாரி கோவில் ஆகியோர் முதலில் குண்டம் இறங்கி தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து15 நாள் விரதம் இருந்த குருமந்தூர், நம்பியூர், மூணாம் பள்ளி, கடத்தூர், எலத்தூர் செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி