கோபி கச்சேரிமேடு அருகே மாவட்ட சிறை இயங்குகிறது. இங்கு சிறை அலுவலர் ஒருவர் கண்காணிப்பில் 37 பேர் பணியில் உள்ளனர். சிறையின் பிரதான இரும்பு கதவு வழியாக உள்ளே செல்வோரும், வெளியேறுவோரும் கட்டாய பரிசோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு சிறைத்துறை பணியாளர்களை நேற்று(செப்.19) சோதனை செய்ததில், கிரேடு-1 வார்டன் சாமிநாதனிடம், சி.பி.எம்., என்ற பெயர் கொண்ட, 30 மாத்திரை இருந்தது.
இதுகுறித்து கோவை மத்திய சிறை கண் காணிப்பாளர் செந்தில்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உத்தரவின்படி சாமிநாதன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். சி.பி.எம்., என்ற மாத்திரை, சளி, அரிப்பு மற்றும் அலர்ஜி போன்ற நோய்களுக்கு பயன்படுத்தும் மாத்திரை என அரசு மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.