வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ். பி பாராட்டு

62பார்த்தது
வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ். பி பாராட்டு
ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாநில அளவில் 64-ஆவது குடியரசு தின விழா வாலிபால் போட்டி திருச்சி-தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டியில் நம்பியூா் குமுதா பள்ளி மாணவியா், கால் இறுதிச் சுற்றில் சென்னை மாவட்ட அணியை வென்று அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனா். அரை இறுதி ஆட்டத்தில் திருப்பத்தூா் மாவட்ட அணியை 25-13, 25-16 என்ற புள்ளிக் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனா். இறுதிச் சுற்றில் குமுதா பள்ளி மாணவிகள் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கம் வென்றனா். மாநில அளவில் சிறப்பாக விளையாடி, வெள்ளிப் பதக்கம், பரிசுக் கோப்பையை வென்ற மாணவிகளை ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜவகா் பாராட்டி, பரிசுக் கோப்பையை வழங்கினாா். இந்த மாணவிகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சம்பத், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் சாலமன், குமுதா கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே. ஏ. ஜனகரத்தினம், துணை தாளாளா் சுகந்தி, பள்ளி செயலா் டாக்டா் ஜெ. அரவிந்தன், துணை செயலா் டாக்டா் மாலினி, முதல்வா் எஸ். மஞ்சுளா, துணை முதல்வா் கே. வசந்தி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், விளையாட்டு இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா்கள் பாராட்டினா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி