பூம்புகார் விற்பனை நிலையத்தில் விளக்குகள் விற்பனை கண்காட்சி

77பார்த்தது
ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விளக்குகள் சிறப்பு விற்பனை கண்காட்சி துவங்கியது.

ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கைவினை கலைஞர்கள் தயாரிக்கும் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விளக்குகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை இன்று துவங்கியது. இன்று முதல் (28. 11. 2024) அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடைபெற்ற உள்ள இந்த சிறப்பு விற்பனை கண்காட்சியில், 4 அங்குலம் முதல் 6 அடி வரையிலான அன்னம் குத்து விளக்குகள், கிளி விளக்குகள், மலபார் விளக்குகள், பிரதோஷ விளக்குகள், குபேர விளக்குகள் என பல்வேறு வடிவிலான விளக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 15 ரூபாய் முதல் 1 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் விளக்குகள் உள்ளதாவும், குறிப்பிட்ட விளக்குகளுக்கு 10 சதவீதம் சிறப்பு தள்ளுப்படி வழங்கப்படும் என பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் அருண் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி