ஈரோடுஎஸ்பி அலுவலகத்தில் செயல்பட்ட போலீஸ் தேர்தல் பிரிவு அலுவலகம் கலைக்கப்பட்டது.
ஈரோடு நாடாளு மன்ற தேர்தலையொட்டி எஸ்பி அலுவலகத்தின் தரைத்தளத்தில் மாவட்ட போலீஸ் தேர்தல் பிரிவு அலுவலகம் அமைக்கப் பட்டிருந்தது. இப்பிரிவுக்கு டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்ஐ. க்கள், போலீசார் ஆகியோர் நியமிக்கப்பட் டிருந்தனர். இவர்கள், பதட்டமான வாக்குச்சாவ டிகள், வேட்பாளர்கள் பிரசார நிலவரம், தேர்தல் விதிமுறை மீறல் போன்ற நடவடிக்கைகளை கண் காணித்து வந்தனர். இந் நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதி
முறைகள் நேற்று முன்தி னத்துடன் நிறைவடைந் ததையொட்டி, எஸ்பி அலுவலகத்தில் செயல் பட்ட மாவட்ட போலீஸ் தேர்தல் பிரிவு அலுவலகம் கலைக்கப்பட்டு, அங்கு பணியாற்றிய அனைவ ரும் அவர்களது பணிக்கு திரும்பினர்.
இதேபோல், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரும் ஈரோட் டில் தேர்தல் பாதுகாப்பு பணியை நிறைவு செய்து, ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதே போல், பட்டாலியன் போலீசார், ஆயுதப்படை போலீசாரும் அவர்களது ரெகுலர் பணிக்கு திரும்பி னர் என போலீஸ் அதிகா ரிகள் தெரிவித்தனர்.