அந்தியூரில் தேமுதிக சார்பில் மவுன ஊர்வலம்

1912பார்த்தது
அந்தியூரில் தேமுதிக சார்பில் மவுன ஊர்வலம்
அந்தியூரில் தேமுதிக. தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி, அனைத்து கட்சியினர் கலந்து மவுன ஊர்வலம் நேற்று நடந்தது. அந்தியூர் ஒன்றிய தேமுதிக. , சார்பில், ஒன்றிய செயலாளர் சுதாகர் தலைமையில், திமுக. , அதிமுக. , பாமக. , உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடந்தது. அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலிருந்து துவங்கிய ஊர்வலம், சிங்காரவீதி, பர்கூர் ரோடு வழியாக பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா அருகே முடிவடைந்தது. இதையடுத்து, ரவுண்டானா அருகில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் திருவுருவப் படத்துக்கு, அந்தியூர் எம்எல்ஏ. , வெங்கடாச்சலம், தேமுதிக மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அதிமுக. , வை சேர்ந்த மோகன்குமார், வேலு என்கிற மருதமுத்து, பாமக. , வை சேர்ந்த கோபால், தேமுதிக பேரூர் செயலாளர் முனாப், அத்தாணி பேரூர் செயலாளர் விஜயக்குமார் மற்றும் தேமுதிக. , ஊராட்சி, கிளை தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி