விசிக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

572பார்த்தது
விசிக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
அந்தியூர் அருகேயுள்ள சொக்கநாதமலையூரில் விசிக. , சார்பில் முகாம் கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள சொக்கநாதமலையூரில் உள்ள பொறுப்பாளர் செவ்வந்தி இல்லத்தில், விசிக. , சார்பில், மகளிரணி முகாம் கட்டமைப்பு மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம், பொறுப்பளர் செவ்வந்தி துரைசாமி தலைமையில் நடந்தது.
ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உறுப்பினர் சேர்க்கை மற்றும் மகளிரணியினர் சார்பில் முகாம் கட்டமைப்பு பற்றி ஆலோசனை நடத்தினார்.
மேலும், திருச்சியில் நடக்கும் வெல்லும் சனநாயம் மாநாடு குறித்து பேசிய மாவட்ட செயலாளர், துண்டு பிரச்சுரத்தை பொதுமக்களிடம் வழங்கினார்.
இதில், மாவட்ட ஊடக மைய அமைப்பாளர் சுரேஷ் செங்கோடன், மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார், பேரூர் செயலாளர் அன்பு, துணை செயலாளர் ரமேஷ், நில மீட்பு மாவட்ட அமைப்பாளர் செந்தில், மகளிரணி மஞ்சு, தீபா, கனிமொழி, யாழினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி