ஈரோடு நீதிமன்ற வளாகத்தில் புத்தக கண்காட்சி துவக்கம்

579பார்த்தது
ஈரோடு நீதிமன்ற வளாகத்தில் புத்தக கண்காட்சி துவக்கம்
ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தி ஈரோடு பார் அசோசியேசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது.

முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி முருகேசன் தலைமை வகித்து, புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். தி ஈரோடு பார் அசோசியேசன் தலைவர் குருசாமி, செயலாளர் ராஜா, ஈரோடு அட்வகேட் அசோசியேசன் தலைவர் துரைசாமி, செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். நேற்று துவங்கிய புத்தக கண்காட்சி மூன்று நாட்கள் நடக்கிறது.

அனைத்து புத்தகங்களுக்கும், 10 சதவீத தள்ளுபடி உள்ளது. பொது அறிவு, இலக்கியம், வரலாறு, தலைவர்கள் உட்பட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை காட்சிப்படுத்தி உள்ளனர். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கிளை மேலாளர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி