ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் கொப்பரை ஏலம்

53பார்த்தது
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் கொப்பரை ஏலம்
ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் நடந்தது. மொத்தம், 1, 690 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ கருப்பு ரகம், 117. 09 ரூபாய் முதல், 147. 69 ரூபாய்; சிவப்பு ரக எள், 115. 59 ரூபாய் முதல், 148. 88 ரூபாய்; வெள்ளை எள், 137. 10 ரூபாய் முதல், 142. 43 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 1. 26 லட்சம் கிலோ எள், 1. 77 கோடி ரூபாய்க்கு விற்றது.

அவல்பூந்துறை ஒழுங்கு விற்பனை கூடத்துக்கு, முறை 12, 793 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ தேங்காய், 24. 88 ரூபாய் முதல், 34. 99 ரூபாய் வரை, 4, 767 கிலோ தேங்காய், 1. 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 18 ரூபாய், நேந்திரன், 26 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 460, தேன்வாழை, 520, செவ்வாழை, 960, ரஸ்த்தாளி, 480, பச்சைநாடான், 370, ரொபஸ்டா, 290, மொந்தன், 200 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 5, 270 வாழைத்தார்களும், ரூபாய்க்கு 6. 24 லட்சம் விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய் குறைந்தபட்சம், எட்டு ரூபாய்க்கும், அதிகபட்சம், 16 ரூபாய்க்கும் விற்பனையானது.

தொடர்புடைய செய்தி