வசதிகள்மேம்படுத்தப்படும் அதிமுகவேட்பாளர் அசோக்குமார்உறுதி

61பார்த்தது
வசதிகள்மேம்படுத்தப்படும் அதிமுகவேட்பாளர் அசோக்குமார்உறுதி
ஈரோட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்
அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உறுதி
ஈரோட்டில் சாலை, மேம்பாலம் உள்பட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உறுதியளித்துள்ளார்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார் நேற்று ஈரோடு சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு, குமலன்குட்டை, வீரப்பன்சத்திரம், பெரியவலசுநால்ரோடு, எம்ஜிஆர் வீதி, அப்பன்நகர், நேருவீதி, மணிக்கூண்டு, ஈஸ்வரன்கோயில் வீதி, கருங்கல்பாளையம், கிருஷ்ணம்பாளையம், அக்ரஹாரவீதி, அசோகபுரம், முனிசிபல்காலனி, பாப்பாத்திகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். வாக்குசேகரிப்பின் போது முன்னாள் அமைச்சர் கே. வி. ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, வீரப்பன்சத்திம் பகுதி செயலாளர் கேசவமூர்த்தி, ஜெ. பேரவை மாநில துணை செயலாளர் வீரகுமார், மாவட்ட இணை செயலாளர் ஆவின் ராஜேந்திரன், வார்டு செயலாளர் சந்தானம், முன்னாள் மேயர் மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி