வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பூமியிலிருந்து 520 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய கோளை கண்டறிந்துள்ளனர். இந்த கோள் நமது பூமியின் விட்டதைப் போன்று 10 மடங்கும், வியாழன் கோளின் நிறையில் மூன்றில் ஒரு பங்கையும் கொண்டுள்ளது. இந்த கோள் உருவாகி 30 லட்சம் ஆண்டுகள் தான் ஆவதால், இதை முழுமையாக ஆராய்ச்சி செய்தால் பூமி எவ்வாறு உருவாகி இருக்கும் என்கிற புரிதலை நாம் பெறலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.