வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து, முன்னாள் மத்திய இணையமைச்சரும்,
திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் 3-வது நாளாக சோதனை நடத்தினர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். ஜெகத்ரட்சகன் தனது கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் சென்றது. வருமான வரித்துறையினர் கடந்த 5ஆம் தேதி முதல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இது தொடர்பாக, ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும், கைது செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.