வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் நடிக்கும் துல்கர் சல்மான்

71பார்த்தது
வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் நடிக்கும் துல்கர் சல்மான்
நடிகர் துல்கர் சல்மான் 'லக்கி பாஸ்கர்' படத்தில் நடித்துள்ளார். வெங்கி அட்லூரி இயக்கிய, இப்படம் செப்டம்பர் 7-ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், கல்கி 2898 ஏடி பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பவன் சதினேனி இயக்க இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு துல்கர் சல்மானின் பிறந்த நாளான வரும் 28-ந் தேதி வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி